Friday, November 27, 2015

Android 6.0 Mல் உள்ள பேட்டரி மற்றும் Dataவை சேமிக்கும் வசதியை மற்ற version களிலும் பெற....

இன்று smartphone வைத்திருப்பவர்கள் அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை battery சீக்கிரமே தீர்ந்து விடுவது தான். என்ன தான் அதிக பேட்டரி சக்தி கொண்ட போன் வாங்கினாலும் இன்று அனைத்து வேலைகளையும் போன் மூலமே மேற்கொள்வது எளிதாக இருப்பதால், பேட்டரியின் சக்தி நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பதில்லை. அந்த குறையை நீக்க Android 6.0 புதிய பதிப்பில் Doze எனும் வசதி மூலம் தீர்வு கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் அதற்கு முன் version களில் இந்த வசதியை பெற முடியாது. இந்த குறையை போக்க அதே போ‌ன்ற வசதி உள்ள DOZE எனும் Application ஐ வடிவமைத்துள்ளார்கள்.
இதன் மூலம் உங்கள் போனின் பேட்டரி சக்தியை நீட்டிக்கலாம். இதை Android 4.0 முதல் உபயோகிக்கலாம். முக்கியமாக இந்த Application உங்கள் போன் எப்பொழுது screen off ஆகிறதொ உடனடியாக உங்கள் போனின் data வை background ல் வீணாகமல் தடுக்கிறது. 
 
இதனால்  உங்களின் பேட்டரி மற்றும் Data வும் மிச்சமாகிறது. Android 6.0 ல் உள்ள DOZE ஐ விட இது இன்னும் சிறப்பானது. ஏனெனில்  அதில் charging ல் இருந்தால் இயங்காது, அதேபோன்று போன் screen off ஆகி அரை மணி நேரத்திற்கு பின்னரே இயங்கும். அதனால் இது அதை விட  சிறந்ததாக உள்ளது. 
 மேலும் active list என்ற option மூலமாக தேவையான Apps களை  background ல் இயங்கும் படி செய்துக் கொள்ளலாம். அத்துடன் aggressive mode ஐ க்ளிக் செய்வதன் மூலம் background ல் இயங்கும் Apps களை கிட்ட தட்ட screen off ஆன பிறகு இயங்குவதையே தடுக்க முடியும்.  உங்கள் மெயில், wifi share போன்ற முக்கியமான apps கள் பின்புலத்தில் இயங்குவது தடை ஏற்படும்.  அதனால் தேவையானவற்றை  active list ல் tick  செய்துடுங்கள். 

இந்த Application ஐ Download செய்ய இங்கே க்ளிக் செய்யவும்...  Download செய்து பேட்டரி மற்றும் Data வை சேமியுங்கள்..... 



மேலும் ஒரு சிறு துளி....  நாம் உபயோகிக்கும் prepaid plan களுக்கு ஏற்ப நமக்கு recharge களை பரிந்துரைக்கிறது smartapp எனும் Application. இதை நம் போனில் நிறுவி விட்டால் நம்முடைய உபயோகத்திற்கு ஏற்ப combo pack களை பரிந்துரைக்கிறது. இதனால் நம் பணமும் மிச்சமாகிறது.

மேலும் இந்த Link ல் சென்று Download செய்வதன் மூலம் உங்களின் முதல் Recharge ல் ரூபாய் 50 discount பெறலாம். 

Monday, November 23, 2015

போன் மூலம் இலவச ஆங்கில கல்வி கற்க....


ஆங்கிலம் இன்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய மொழி ஆகி விட்டது. ஆங்கில மொழி தெரியாதவர்கள் அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து கற்கிறார்கள். இனி அந்த செலவை சேமிக்கலாம். ஆம்... உங்களிடம் ஒரு Android ஃபோன் இருந்தால் போதும் HELLO ENGLISH என்ற APP மூலமாக உங்களை ஒரு ஆங்கில ஆசிரியர் வழிநடத்துவார். இதற்காக நீங்கள் அவருக்கு பணம் எதுவும் தர வேண்டியதில்லை. இலக்கண ரீதியாக உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்.
 

எனக்கு ஆங்கிலத்தில் ABCD தவிர வேறு எதுவும் தெரியாது என்றாலும் கூட உங்களை ஒரு ஆங்கில பேச்சாளராக மாற்றுவார். இல்லை எனக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்றால் அதற்கு அவரே பரீட்சை வைத்து உங்களுக்கு தெரிந்ததற்கு மேல் சொல்லித்தருவார். உங்களுக்கு மொத்தம் 250 பாடங்கள் கொடுக்கப்படும். உங்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண்கள் (coins) நாணயங்களாக கொடுக்கப்படும். இதில் அதிக நாணயங்கள் (மதிப்பெண்கள்) பெற பெற உங்களுடைய Rank அதிகமாகும். உங்களுக்கு என்று ஒரு அறிக்கை அட்டையும்  (progress report) கொடுத்து உங்களை வழி நடத்துவார் உங்கள் ஆசிரியர். 
 
தமிழுடன் இன்னும் பல இந்திய மொழிகளிலும் கூட ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம். மொத்தம் 15 மொழிகளின் வழியாக நீங்கள் ஆங்கிலம் கற்கலாம். 
அத்துடன் spelling பயிற்சி உச்சரிப்பு பயிற்சி என பல பயிற்சிகளும் உண்டு. Internet வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அனைத்தும் Offline பாடங்கள். இந்த application ஐ பெற கீழே உள்ள Link ல் சென்று Download செய்து நீங்களும் ஆங்கில பேச்சாளராக ஆகுங்கள்....