Saturday, December 26, 2015

ரயிலில் waiting list டிக்கெட்டுகளை confirm செய்யும் செயலி

விடுமுறை நாட்களிலும்  மற்ற பயணங்களுக்கும் நாம் பயணம் என்றால் முதலில் ரயிலில் டிக்கெட்  இருக்கிறதா என்றே பார்ப்போம். காரணம் பயண செலவு குறைவு வசதிகள் அதிகம் அதனால்.

முன்பதிவு செய்வதற்காக  IRCTC தளத்திற்கு செல்வோம்.  ஆனால் அங்கு நமக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கும்.

என்னவென்றால் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து பல நூறு டிக்கெட்டுகள்  Waiting list ல் இருக்கும். விடுமுறை நாட்களிலோ கேட்கவே வேண்டாம்.

இதனால் நாம் நம் பயணத்தை தள்ளி போடுவோம் இல்லை எனில் Waiting list டிக்கெட்டுகளை book செய்துவிட்டு கடைசி நேரம் வரை conform ஆகுமா ஆகாதா என்று ஏங்கிக்கொண்டு இருப்போம்.
 எப்பவும் போல் நம் டிக்கெட்டுகள் conform ஆகாது. பிறகு கடைசியில் வேறு வழியில்லாமல் அதிக கட்டணத்தில் busல் செல்வோம்.

இனி அந்த கவலை வேண்டாம் ConfirmTkt என்ற இந்த செயலியின் மூலம் நாம் டிக்கெட்டுகளின் நிலைமையை பார்த்து பிறகு book செய்து கொள்ளலாம். முக்கியமாக Waiting list டிக்கெட்டுகளை இந்த செயலியில் பார்த்து அவைகள் பச்சை நிறத்தில்
இருந்தால் கண்டிப்பாக நாம் book செய்யலாம்.

 கீழுள்ள படங்களில் irctc கும் இந்த செயலிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

                  IRCTC ல்    Waiting list என்று பார்த்து விட்டு நாம்  பயணம் செய்ய வேறு வழியை தேடுவோம். ஆனால்  அதே தேதியில்  இந்த செயலியில் பாருங்கள்.
அதே Waiting list டிக்கெட்டுகள் இந்த செயலியில் பச்சை நிறத்தில் இருந்தால் கண்டிப்பாக book செய்யலாம். மஞ்சள் நிறத்தில் இருந்தால் சந்தேகம் தான். சிகப்பு நிறத்தில் இருந்தால் ஆகாது. இதை தெரிந்து கொண்டு நாம் டிக்கெட்டுகளை  book செய்யலாம்.

 இதனால் நம் பணமும் தவிப்பும் மிச்சமாகும். ஆனால் இந்த செயலியின் மூலமே டிக்கெட் book செய்ய இயலாது. இதில் பார்த்து விட்டு நாம் IRCTC தளத்தில்  செய்து கொள்ளலாம் கட்டாயம் conform ஆகும் . இந்த செயலியை download செய்ய இங்கே க்ளிக் செய்யவும். 

சிறு குறிப்பு: நீங்கள் சென்னையில் இருந்து கோவை செல்ல மங்களூர் ரயிலில் டிக்கெட் book செய்கிறீர்கள் என்றால் ஒரு வேளை நீங்கள் இந்த செயலியில் பார்க்கும் பொழுது Waiting list டிக்கெட்டுகள் மஞ்சள் நிறத்திலோ  அல்லது சிவப்பு  நிறத்திலோ இருந்தால் நீங்கள் இந்த செயலியில் point to point போட்டு தேடுங்கள் அப்போது அவைகளே பச்சை நிறத்தில் காட்டும். பின் நீங்கள் இதே point to point டிக்கெட் எடுத்து கோவையில் இறங்கி கொள்ளலாம். ஒரு நூறு ரூபாய் அதிகம் ஆனாலும் ரயிலில் பயணம் செய்ய முடியும். 




No comments:

Post a Comment